வரும் 11.10.2012 அன்று தமிழ் மாநில அஞ்சல் கூட்டு போராட்டக்குழுவின்
சார்பாக மதுரை அஞ்சல் பயிற்சி மைய இயக்குனர் நிர்மலாதேவி அவர்களின்
மனித நேயமற்ற செயல்களை கண்டித்து ஒரு நாள் வேலை நிறுத்தம் செய்ய
முடிவு செய்யப்பட்டுள்ளது.
மதுரை அஞ்சல் பயிற்சி மைய இயக்குனர் நிர்மலதேவி அவர்களின்
அத்து மீறிய அநியாய செயல்களையும் கொடுமைகளையும் தடுக்க வேண்டி
தமிழ் மாநில அஞ்சல் மூன்று சங்கம் 20.06.2012 அன்றே தமிழக அஞ்சல்
துறை தலைவர் அவர்களுக்கு கடிதம் கொடுத்தது . அனால் தமிழ் மாநில
அஞ்சல் நிர்வாகம் நாம் நிர்மலாதேவி அவர்களின் மீது கொடுத்த
குற்றச்சாட்டுக்கள் உண்மைக்கு புறம்பானவை என்று நமது கடிதத்தை
நிராகரித்து விட்டது.
இதனால் நிர்மலாதேவி அவர்களின் கொடுமைகள் எல்லை மீறி சென்று
விட்டது. அவருடைய கொடுமைகளை தாங்க முடியாமல் சென்னை வட
கோட்டத்தை சேர்ந்த தோழர். ஜெயகுமார் 19.09.2012 மதுரை அஞ்சல் பயிற்சி
மையத்திலேயே தற்கொலை செய்துகொண்டார்.
நமது தமிழ் மாநில சங்கத்தின் கோரிக்கையை ஏற்று அன்றே நடவடிக்கை
எடுத்திருந்தால் இன்று ஒரு உயிர் பலி ஏற்பட்டிருக்காது.
இனியும் நாம் பொறுமையுடன் இருக்கமுடியாது.
மதுரை அஞ்சல் பயிற்சி மையத்தில் தற்கொலை செய்து கொண்ட தோழர்
ஜெயகுமார் அவர்களின் அகால மரணத்திற்கு முறையான விசாரணை
வேண்டியும், நிர்மலாதேவி அவர்களின் மீது முறையான நடவடிக்கை எடுக்க
வலியுறுத்தியும் 21.09.2012 அன்று அணைத்து மாநில செயலர்களும்
உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.
நிர்மலாதேவி அவர்களின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி 11.10.2012
அன்று ஒரு நாள் வேலை நிறுத்தம் செய்வது என் முடிவெடுத்து கூட்டு
போராட்டக்குழுவின் சார்பாக வேலை நிறுத்த அறிவிப்பை தமிழ் மாநில
அஞ்சல் நிர்வாகத்திடம் தலைவர்கள் அளித்துள்ளனர்.
அநீதி கண்டு வெகுண்டெழுந்து போராட அறைகூவல் விடுத்துள்ளனர்.
அநீதிக்கெதிராக அனைவரும் ஓரணியில் திரள்வோம்.
அநீதி களைய வெகுண்டெழுந்து போராடுவோம்
ஒன்றுபடுவோம்! போராடுவோம்!! வெற்றிபெறுவோம்!!!
வேலை நிறுத்தப் போராட்ட வாழ்த்துக்களுடன்
தோழமையுள்ள
வீரன்
கோட்ட செயலர்
Thank you Com. Veeran and Thanks for Vellore Comrades , including our Circle Union office bearer Com. Amruthaganesan , for having exhibited the
ReplyDeletePTC, Madurai issue in your division web site, in Tamil, in a very clear manner.
Thanks again for all,
Yours
J.R., C.S.