என்ன செய்கிறது உங்கள் மாநிலச் சங்கம் ?
கடந்த 28.01.2016 அன்று - ஏற்கனவே 08.01.2016 அன்று நம் மாநிலச்
சங்கத்தினால் கொடுக்கப்பட்ட கடிதத்தின் அடிப்படையில் - பல்வேறு
பிரச்சினைகள் குறித்து CHIEF PMG அவர்களிடமும் , DPS HQ /DPS CCR
அவர்களிடமும் நாம் பேசினோம் . அதனடிப்படியில் மாநில நிர்வாகம் அளித்த
பதில்களை கீழே தருகிறோம்.
1.ஒத்திவைக்கப்பட்ட அடுத்த RJCM
கூட்டம் எதிர்வரும் 16.2.2016 அன்று நடைபெறும் . அதற்கான SUBJECTS
01.02.2016 க்குள் கிடைக்குமாறு அளிக்க வேண்டும்.
2.வெள்ள முன்பணம்,
பாதிக்கப்பட்ட பகுதிகளில் விண்ணப்பித்த ஊழியர்களுக்கு நிச்சயம் அடுத்த
வாரத்தில் வழங்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுதும்
வழங்கிட நாம் கோரினோம். இறுதியில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர்,
கடலூர் மாவட்டப் பகுதிகளுடன் பாண்டிச்சேரி மற்றும் தூத்துக்குடி மாவட்டப்
பகுதிகளில் விண்ணப்பித்தவர்களுக்கும் சேர்த்து வழங்கிட CHIEF PMG
அவர்கள் உறுதியளித்துள்ளார்.
3. வெள்ளம் பாதித்த மாவட்டப் பகுதிகளில் WELFARE FUND இல் இருந்து
உதவித்தொகை விண்ணப்பித்த GDS ஊழியர்களுக்கு, உரிய VAO சான்றாவது
இணைக்கப்பட்டிருந்தால் மட்டுமே வழங்கிடப்படும் என்று CPMG தெரிவித்தார்.
இதற்கு மாநில சேமநல நிதியில் உரிய அளவு தொகை இல்லையெனில், மத்திய
சேமநிதித் தொகுப்பில் இருந்து கேட்டு, பாதிக்கப்பட்ட ஒவ்வொரு ஊழியருக்கும்
குறைந்த பட்சம் ரூ.5000/- வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.
4. நாம் கேட்டுக் கொண்டபடி GDS
இலிருந்து தபால்காரராக தேர்வு பெற நடத்திடவேண்டிய தேர்வுக்கான
அறிவிக்கையானது கண்டிப்பாக அடுத்த வாரத்தில் வெளியிடப்படும் என்று
தெரிவித்தார்.
5. 2015க்கு அறிவிக்கப்படவேண்டிய LGO
TO P .A . தேர்வுக்கான அறிவிக்கை நிச்சயம் இந்த மாதத்தில் (FEBRUARY 2016)
15 இலிருந்து 20 நாட்களுக்குள் அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
என்றும் தெரிவித்தார்.
6. 2015 -16 க்கான 5 ஆவது LSG பதவி
உயர்வுப் பட்டியல் தயார் நிலையில் உள்ளது. கடந்த பட்டியலில் உள்ளவர்கள்
பதவி உயர்வில் சென்று சேர்ந்தவுடன் இது வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்
பட்டது. அதாவது அடுத்த வாரத்தில் வெளியிடப்படலாம். இதுவரை அஞ்சல்
பகுதியில் மட்டும் 378 பேருக்கு பதவி உயர்வும் , இதன் காரணமாக 378
எழுத்தர் காலியிடமும் நாம் போராடிப் பெற்றுள்ளோம்.
7.மேலும் "போனஸ்" ஆக 2016-17 க்கான LSG பதவி உயர்வுப் பட்டியலும் தயாரிக்கப்பட்டு வருகிறது என்பது உபரிச் செய்தி.
8. இது தவிர , இதுவரை மருத்துவ காரணங்கள் மற்றும் ஒய்வு பெறுவது
நெருக்கத்தில் உள்ளது என்பது போன்ற காரணங்களால் பதவி உயர்வு DECLINE செய்த
ஊழியர்களின் காலியிடங்களுக்கும் நிரப்பிட மேலும் ஒரு பட்டியல்
வெளியிடப்படும் என்ற உறுதியை CHIEF அவர்களிடம் கோரிப் பெற்றுள்ளோம்
என்பது சிறப்பான செய்தியாகும்.
9. ஏற்கனவே கடந்த 2013-14, மற்றும்
2014-2015 ஆண்டுகளில் நம்முடிய கடுமையான முயற்சியினால்
அறிவிக்கப்பட்ட SCRAPPING COMMITTEE மூலம் CONDEMNATION அறிவிக்கப்பட்ட
COMPUTER மற்றும் அதன் உப பொருட்களுக்கு மாற்றாக புதிய கணினி/ உப
பொருட்கள் வாங்கிட நம் மாநிலச் சங்கத்தின் முயற்சியால் கடந்த 16.12.2014
JCM இலாக்கக் குழு கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டது உங்களுக்குத்
தெரியும்.
பின்னர் மீண்டும் மீண்டும் FOUR
MONTHLY MEETING , RJCM MEETING என்று பிரச்சினை வைக்கப்பட்டு கடந்த
13.6.2015 மற்றும் 23.11.2015 தேதிகளில் மீண்டும் துறைச்செயலருக்கு
நினைவூட்டுக் கடிதங்கள் அளித்ததன் விளைவாக, இலாக்கா நம்முடைய
பொதுச் செயலருக்கு தமிழகத்திற் கென்றே தெளிவான தனியான
பதிலையும் அளித்துள்ளது. அதனடிப் படையில் இந்த நிதி ஆண்டில் 2013-14
மற்றும் 2014-2015 க்கான ESTIMATE க்கான நிதி ஒதுக்கப்பட்டு பெற உள்ளோம்.
இது குறித்த உரிய ஆவணங்களுடனான செய்தியை தனியே தருகிறோம்.
இது தமிழ் மாநிலச் சங்கத்தின் அயராத
முயற்சிக்கு கிடைத்த வெற்றியாகும். வேறு எந்த மாநிலங்களிலும் பெறாத
நிலையாகும். இதற்கு இடைவிடாது முயற்சித்த முன்னாள் பொதுச் செயலர்
தோழர். KVS , தோழர். கிருஷ்ணன் மற்றும் இந்நாள் பொதுச் செயலர் தோழர்.
பராசர் ஆகியோருக்கும் நம் நன்றி உரித்தாகும்.
10. இன்று (30.01.2016) Mc CAMISH பிரச்சினை காரணமாக நாட்டின்
அனைத்து பகுதிகளிலும் தொடர்பற்றுப் போனதால் B .O . க்களில் பெறப்பட்ட பல
நூற்றுக் கணக்கான RPLI PREMIUM S .O . க்களில் கணக்கில் கொண்டு வர
இயலவில்லை. இது குறித்த புகார் மாநிலச் சங்கத்திற்கு மதியம் 3.30
மணியளவில் கிடைக்கப் பெற்றவுடன் , இன்று நிர்வாக அலுவலகங்களுக்கு
விடுமுறையான போதிலும், நாம் அலைபேசியில் CHIEF அவர்களிடம் பிரச்சினையைக்
கூறி புகார் அளித்தோம். அவரும் மற்றும் DPS HQ ADDL CHARGE நிலையில்
உள்ள DPS CCR அவர்களும், உடன் DTE வரை பேசி உரிய ஆவன நடவடிக்கையை
விரைவாக எடுத்து மாலை 04.55 க்கு நமக்கு சரி செய்யப்பட்டதாக
தகவல் தெரிவித்தார்கள் .மாலை 05.05 மணி முதல் Mc CAMISH
செயல்படத் துவங்கியதாக பல பகுதிகளில் இருந்தும் நமக்கு தோழர்கள்
தெரிவித் தார்கள். உடன் நடவடிக்கை மேற்கொண்ட CPMG மற்றும் DPS CCR
ஆகிய இருவருக்கும் நம் நன்றி !
No comments:
Post a Comment