expr:class='"loading" + data:blog.mobileClass'>

Wednesday 23 March 2016

URGENT CALL TO CIRCLE UNION OFFICE BEARERS TO DECIDE ON FURTHER COURSE ON TRADE UNION ACTION ON CBS AND CIS ISSUES

   அஞ்சல் மூன்று  மாநிலச் சங்க 
நிர்வாகிகளுக்கு அவசர  அழைப்பு !

CBS /CIS  தொடர்பான  பிரச்சினைகள்  நாடு முழுமைக்குமானதாக  இருந்த போதிலும்  இதுவரை எந்த மாநிலச் சங்கத்தையும் விட இரண்டாம் நிலை  EOD  , முதல் நிலை  EOD  என்று   நம்முடைய   அஞ்சல்  மூன்று மாநிலச் சங்கம் எடுத்து    பிரச்சினைகளில்   முன்னேற்றம்  பெற்றது உங்களுக்குத் தெரியும் .  இது தவிர  துறை  அமைச்சர் வரை, நம்முடைய தமிழ் மாநில அஞ்சல் மூன்று  சங்கத்தின் முயற்சியால் பிரச்சினைகள் நம்முடைய அகில இந்திய சங்கத்தின் மூலமும்  சம்மேளனத்தின் மூலமும் கொண்டு செல்லப்பட்டுள்ளன. தற்போது  ஏற்பட்டுள்ள மோசமான  பிரச்சினை குறித்து  தீர்வு  காண  ஏற்கனவே  முதற்கட்ட போராட்டத்தை கடந்த 17.3.2016 அன்று நாம்  அறிவித்து  நடத்தினோம்.  

பிரச்சினை தீர்வு நோக்கி CPMG  அவர்களுடனும்  நாம் பேசினோம் . CPMG அவர்கள், இந்தப் பிரச்சினை  நாடு முழுமைக்குமான  பிரச்சினையாக உள்ளது  . மாநில அளவில் தீர்க்க  இயலவில்லை . எனவே  இது  குறித்து உங்கள்  அகில இந்திய சங்கத்தின் மூலம் மேலே  எடுத்துச் செல்லுங்கள் என்று   கூறியுள்ளார்.  

எனவே  இது குறித்து  நம்முடைய அகில இந்தியப் பொதுச் செயலர் மற்றும்  சம்மேளன  மாபொதுச்  செயலரிடம்  கடிதம் மூலமும் தொலைபேசி மூலமும் எடுத்துச் சென்றுள்ளோம் .  மேலும்  அகில இந்திய அளவில்  உடனடியாக  போராட்டத்தை அறிவிக்க  வேண்டி யுள்ளோம். 

இருப்பினும் அதற்காக  காத்திராமல்  நம்முடைய  மாநில அளவில் முதற்கட்ட போராட்டத்திற்கு பின்னர்  அடுத்த கட்ட போராட்டம்  குறித்து உடனடி முடிவெடுத்திட  எதிர்வரும்  24.03.2016 காலை  10.00 மணியளவில் சென்னை  தேனாம்பேட்டை  தமிழக அஞ்சல் மூன்று சங்கத்தின் அலுவலகத்தில் சிறிய  இடைவெளியில்  மாநிலச் சங்க நிர்வாகிகளின்  INFORMAL  கூட்டம்  கூட்டப்படுகிறது.  இது   மிக   அவசரமும் அவசியமும் ஆன கூட்டமாகும் . எனவே  தமிழக அஞ்சல்  மூன்று  மாநிலச் சங்கத்தின் நிர்வாகிகள் அனைவரும்  உடனடி  சிறு  விடுப்பு எடுத்து   தவறாமல் கூட்டத்தில்  கலந்துகொண்டு  சரியான முடிவினை  எடுக்க  உதவிடுமாறு கேட்டுக் கொள்கிறோம். அவசரமான கூட்டம்  என்பதால்  தபால் மூலம்  அறிவிப்பு   செய்திட இயலவில்லை  என்பதற்கு  வருந்துகிறோம்.

                                                                 தோழமையுடன் ,
                                                               J . இராமமூர்த்தி, 
                                                              மாநிலச் செயலர் .

குறிப்பு :  

நேற்றைய தேதியில்  நம்முடைய  மாநிலச் சங்கத்தின் மூலம் பேசிய பின்னர்  CPMG  அவர்கள்  FINACLE  SLOWNESS  காரணமாக எந்த ஒரு ஊழியரையும்  இரவு  காத்திருப்பு  செய்யக்கூடாது என்று  கீழ் மட்ட அதிகாரிகளுக்கு  ஈமெயில்  மூலம்  அறிவிக்கை  செய்துள்ளார். எனவே VOUCHER  POST  செய்ய  இயலவில்லை எனின்  உரிய அறிவிப்பு செய்துவிட்டு  அவரவர்கள்  இல்லம்  திரும்பலாம். மறுநாள்  காலை அந்த வேலையை தொடரலாம்.  கோட்ட அதிகாரிகள் செல்லக் கூடாது  என்று கூறுவார்களேயானால்   தங்கள்  பகுதி செயலர் மூலம்  மாநிலச் சங்கத்திற்கு  உடனே  தெரிவிக்கவும்.  உரிய  நடவடிக்கை உடன்  மேற்கொள்ளப்படும

No comments:

Post a Comment