expr:class='"loading" + data:blog.mobileClass'>

Wednesday 28 June 2017

போராட்ட வீச்சு பெருகுகிறது!

போராட்ட வீச்சு பெருகுகிறது!
"""""""""""""""""""""'"""""""""""""""""""""""""""""""""
உண்ணாவிரதம்
இரண்டாவது நாள் தொடர்கிறது !
""""""""""""'""""""""""""""""""""""""""""""""""""''""'''''''"""'""''''
இன்று (27.6.17) சென்னையில் துவங்கிய காலவரையற்ற உண்ணாவிரதம் வெற்றிகரமாக நடந்துவருகிறது.

மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளன மாபொதுச் செயலர் தோழர். M.கிருஷ்ணன் அவர்களுடன் தோழர். G. கண்ணன், இணைப்புக் குழு கன்வீனர், தோழர்.
J.R., மாநிலச் செயலர் அஞ்சல் மூன்று, கேசுவல் ஊழியர் சங்கத்தின் அ.இ. பொ.
செயலர் தோழர். மோகன், அ.இ. செயல் தலைவர் தோழர். நாகபூஷணம், மாநிலத் தலைவர் தோழர். சிவகுருநாதன் உள்ளிட்ட தலைவர்களும் ஏராளமான கேசுவல் ஊழியர்களும் உண்ணாவிரதத்தை தொடர்ந்து நடத்திவருகின்றனர்.
500 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் CPMG அலுவலக வளாகத்தை தலைகளால் நிரப்பியது, கேசுவல் ஊழியர்களுக்கான போராட்ட வரலாற்றில் ஒரு சரித்திரப்
பதிவு ஆகும்.
நாளை இரண்டாவது நாள் உண்ணாவிரதப் போராட்டம் தொடர்கிறது.
இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட கட்சியைச் சேர்ந்த தோழர். T.K. ரங்கராஜன் , M.P. அவர்கள் உண்ணாவிரதப் பந்தலுக்கு வந்து தங்கள் ஆதரவைத் தெரிவித்து வாழ்த்திப் பேசினார் .
நாளை நண்பகல் தி.மு.க. வைச் சேர்ந்த M.P. திரு. R.S. பாரதி அவர்கள் கலந்து கொண்டு ஆதரவு தெரிவிக்க உள்ளார்.
நமது மகா சம்மேளன மாபொதுச் செயலர் களமிரங்கி நம் மண்ணில் காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்கும் போது
நம் தோழர்கள் ஆங்காங்கே நின்று செய்தி கேட்டறியவோ, ஒதுங்கி நின்று வேடிக்கை பார்ப்பதோ சரியாக இருக்க முடியாது.
நாலை காலை, தமிழகம் முழுவதிலிருந்தும்
ஆயிரக்கணக்கில் தோழர்கள் திரண்டு வர அழைக்கிறோம்.
போராட்டத்தின் வீச்சு பெருகட்டும் . கோட்டக்/கிளைச் செயலர்களை வேண்டுகிறோம். நீங்கள் கண்டிப்பாக கலந்து கொண்டு நம் ஒற்றுமையை , வலிமையை நிர்வாகத்திற்கு உணர்த்துங்கள்.
நிகழ்வில் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் சில உங்களின் பார்வைக்கு கீழே அளிக்கிறோம்.
தோழமையுடன்
அஞ்சல் மூன்று சங்கம்,
தமிழ் மாநிலம்.





No comments:

Post a Comment