expr:class='"loading" + data:blog.mobileClass'>

Wednesday 12 December 2012

நன்றி !  நன்றி!!   நன்றி !!!


அன்புத் தோழர்களே!  தோழியர்களே!!  வணக்கம்..



12.12.12  அன்று  நடை பெற்ற  மாபெரும் வேலை நிறுத்த போராட்டத்தில்  கலந்துக் கொண்ட  அன்புத்  தோழர்/தோழியர்களுக்கு கோட்டச் சங்கத்தின் நெஞ்சார்ந்த நன்றி !  


ஒரு சில  தோழர்கள்/தோழியர்கள்   தம்மைத்  தாமே   பரிசீலிக்க வேண்டிய நேரமிது ....

தனிப்பட்ட  மன உணர்வுகள் இயக்கத்தை சிதைத்துவிடும்  என்பதை  அவர்கள் உணர வேண்டுகிறோம்.....


இயக்கம் இருந்தால் தான் அவர்களே இருப்பார்கள் என்பதையும் அவர்கள் உணர வேண்டுகிறோம்....... 


தம்  மன நிலைகளில் மாற்றம் பெற நாம் அன்போடு வேண்டுகிறோம் ......   அவர்களை    குறிப்பிட்டுக் காட்ட நம் மனம் ஒப்பவில்லை எனினும்  .......  தேவை அவர்களின் மன மாற்றமே !  அது அவர்களே  அறிய, உணர வேண்டிய உண்மையாகும்.  அந்த  திசை நோக்கி சிந்திக்க அன்புடன்  வேண்டுகிறோம் .....


 நம் அடுத்த கட்ட  போராட்டம்  90%, 95%  வெற்றி அல்ல ....100 க்கு 100% வெற்றிக்கான இலக்காக  இன்றே மனதில்  கொள்ள வேண்டும்.


தொழிற்சங்க வரலாற்றில் இறுதிப் போராட்டம் என்று எதுவுமே இல்லை!



இன்றைய நம் இலக்கு ஏழாவது ஊதியக்குழு உள்ளிட்ட 15 அம்சக் கோரிக்கைகளின் நிறைவே! அந்த திசை நோக்கி அடுத்த கட்ட போரட்டத்திற்கு நாம் தயாராவோம்.


 NFPE இன் வெற்றி உங்களின் வாழ்வு!.

உங்களின் போராட்டம் நம் அனைவரின் எதிர்காலம் !  

  

  நன்றி!           நன்றி!           நன்றி!

  
என்றும் அன்புடன்

       S.VEERAN   
கோட்ட  செயலர்

No comments:

Post a Comment