இதில் உள்ள பிரச்சினைகள் குறித்து நம்முடைய அகில இந்திய பொதுச் செயலரிடம் கடந்த 7,8,9.9.2016களில் கவுஹாத்தியில் நடைபெற்ற சம்மேளன மாநாட்டின் போது, கூட்டப்பட்ட நம் அஞ்சல் மூன்றின் அகில இந்திய செயற்குழுவில் நாம் எடுத்துச்சென்று விவாதித்தோம் .
அதன் மீது மேல் நடவடிக்கை எடுப்பதாக அவரும் உறுதி அளித்துள்ளார். எனினும் கடந்த நான்கு மாதங்களுக்கு ஒரு முறையிலான பேட்டியின்போது எடுக்கப்பட்ட முடிவின்படி , இந்த திட்டத்தை அமல் படுத்துவதில் உள்ள சாதக பாதகங்கள் குறித்து விவாதித்திட நாளை 20.9.2016 காலை 10.30 மணியளவில் ஊழியர் தரப்பு பிரதிநிதிகளின் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.
இதில் நம்முடைய கருத்துக்கள் வைக்கப்படும். வைக்கப்படும் கருத்துக்கள், மற்றும் அதன் மீதான விவாதம், முடிவுகள் ஏதும் ஏற்படின் அவை குறித்து நாளை நம்முடைய வலைத்தளத்தின் மூலமும் , ஈமெயில் மூலமும் நாளை இரவு தெரிவிக்கப்படும்.
ஏனெனில் நாளை 20.9.2016 காலை முதல் 22.9.2016 வரை நம்முடைய அஞ்சல் கணக்குப் பிரிவு சங்கத்தின் (AIPAEA ) அகில இந்திய மாநாடு சென்னையில் நடைபெறுகிறது . அதில் பல்வேறு அகில இந்தியத் தலைவர்கள் கலந்துகொள்ள உள்ளார்கள்.
நாளை மதியம் பொது அரங்கு நிகழ்வில் அஞ்சல் மூன்றின் மாநிலச் செயலரும், அஞ்சல் மூன்றின் அகில இந்தியத் தலைவருமான தோழர். J. இராமமூர்த்தி அவர்கள் கலந்துகொள்ள வேண்டியுள்ளது. எனவே முழு விபரம் மாநாட்டு பொது அரங்கு நிகழ்வு முடிந்தவுடன் வலைத்தளம் மூலம் தெரிவிக்கப்படும். கீழே பார்க்க ஊழியர் தரப்பு ஆலோசனைக்கு கூட்டத்திற்கான அழைப்பின் நகலை.
சிக்கல்களாலும் , இதுவரை எந்த ஒரு மாநிலத்திலும் கேடர் சீரமைப்பு அமல்படுத்தப்படவில்லை.
No comments:
Post a Comment