expr:class='"loading" + data:blog.mobileClass'>

Friday 5 July 2013

FELICITATIONS

                                              நமது கோட்ட முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் 
      திரு V . சந்தானராமன் அவர்கள் இன்று பணியிட மாறுதல் பெற்று செல்கிறார். அவருக்கு நமது கோட்ட சங்கத்தின்  சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

                                               நமது இலாகா விதிகளை நன்கு அறிந்தவர் ,  எளிமையானவர்.  அவருக்கு ஏதேனும் நினைவு  பரிசு வழங்கவேண்டும்  என்று நாம் விரும்பினாலும் அவர் CCS  (CONDUCT ) RULES 1964 ன் விதி  எண் 13 (1) - ஐயும்,  DG P & T Letter No.15/4/67 dt 20.09.1967 - ஐயும் காரணம் காட்டி  எந்த ஒரு பரிசையும் நிராகரித்து விடுவார்.

                                               மிக சிறப்பானதொரு பிரிவு உபச்சார  விழாவை நடத்த நாம் விரும்பினாலும், எளிமை விரும்பியான நமது SSP அதையும் ஏற்றுகொள்ள மாட்டார்.

                                               எனவே கடந்த நான்கு வருடங்களாக நம்மோடு இருந்த அந்த இனிமையான நினைவுகளோடு மட்டும் நம்மை விட்டு பிரிந்து செல்லும் நமது SSP அவர்களுக்கு நமது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களை மீண்டும் தெரிவித்துகொள்கிறோம்.      


                                                                                                                       S. வீரன்
                                                                                                       கோட்ட செயலர், வேலூர் 
                                                                                            மற்றும்  உதவி  மாநில செயலர்
                                                                                                    தமிழ் மாநில அஞ்சல் மூன்று 

No comments:

Post a Comment