expr:class='"loading" + data:blog.mobileClass'>

Wednesday 9 October 2013

NO CHANGE IN OPTIONAL HOLIDAYS - SAYS CGEWCC, TAMILNADU CIRCLE

அன்புத் தோழர்களே  ! வணக்கம்!  

நாம்  நேற்று  நமது CPMG அவர்களிடம் 3 OPTIONAL HOLIDAYS இல்  11.10.2013 ஐ   14.10.2013 ஆக மாற்றித் தருமாறு கேட்டுக் கொண்டிருந்தோம் .  அந்த கடிதத்தின் நகலும் நமது வலைத் தளத்தில் பிரசுரித்திருந்தோம். 

அதே நேரத்தின்   நமது மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின்  தமிழக பொதுச் செயலர் மூலம்  CGEWCC செயலரிடம்  OPTIONAL HOLIDAY ஐ மாற்றித்தர கேட்கப் பட்டிருந்தது. நமது CPMG அவர்களும்  அந்த COMMITTEE இடம் ஆலோசனை செய்துள்ளார்.  

அந்த COMMITTEE இன் செயலரும்  CENTRAL EXISE  COMMISSIONER ருமான  அதிகாரி  தற்போது  நமது  CONFEDERATION செயலருக்கு   கடிதம் அளித்துள்ளார். அதன் நகலை  கீழே பிரசுரித்துள்ளோம்.  பார்க்கவும்.

ஏற்கனவே  COMMITTEE கூடி  தனது முடிவினை  DOPT க்கு தெரிவித் துள்ளதாலும், அப்படி தெரிவிக்கப் பட்டபின்னர்  விடுமுறையை மாற்றக் கூடாது என்று 2012  இல்  DOPT உத்திரவு  அளித்திருப்பதாலும்  இந்த விடுமுறையை தற்போது மாற்றிட இயலாது என்பதே அவரின் கடிதத்தின் சாரம் ஆகும்.  நமது CPMG இடமிருந்து  இதுவரை பதில் வரவில்லை.

 
 

source from www.aipeup3tn.com

No comments:

Post a Comment