STATE CONVENTION AND CONFERENCE OF TN CONFEDERATION A GRAND SUCCESS !
மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் வேலை நிறுத்த
ஆயத்த மாநாடு மற்றும் மாநில மாநாடு மாபெரும் வெற்றி !
கடந்த 05.10.2013 சனிக் கிழமை காலை சுமார் 10.30 மணியளவில் , சென்னை தி.
நகர் , ஜெர்மன் ஹாலில் சம்மேளனத்தின் மாபொதுச் செயலர் தோழர். கிருஷ்ணன்
அவர்கள் தியாகிகள் நினைவிடத்தில் மலர் அஞ்சலி செலுத்த மாநாடு இனிதே
துவங்கியது.
மத்திய
அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் தமிழ் மாநிலத் தலைவர் தோழர். A.G. பசுபதி
அவர்கள் தலைமை வகித்தார் . மாநிலப் பொருளாளர் தோழர். சுந்தரம் அவர்கள்
வரவேற்புரையாற்ற , மாநிலப் பொதுச் செயலர் தோழர். M. துரைபாண்டியன் அவர்கள் மாநாட்டை துவக்கி வைத்து உரையாற்றினார்.
பின்னர்
மாபொதுச் செயலர் தோழர். கிருஷ்ணன் அவர்கள் , ஏழாவது ஊதியக்குழு 01.01.2011
முதல் அமைக்கப் படவேண்டும் எனவும் 50% பஞ்சப் படி 01.01.2011 முதல்
அடிப்படை சம்பளத்துடன் இணைக்கப் பட வேண்டும் எனவும், GDS ஊழியர்களுக்கும்
ஊதியக் குழுவே அவர்களது ஊதிய மற்றும் பணித்தன்மை குறித்து பரிசீலிக்க
வேண்டும் எனவும், 5 கட்ட பதவி உயர்வு வழங்கப் படவேண்டும், புதிய பென்ஷன்
திட்டம் ரத்து செய்யப்பட வேண்டும், வேலை நிறுத்த உரிமை சட்டமாக்கப் பட
வேண்டும் , கருணை அடிப்படையிலான பணி நியமனங்கள் முழுமை யாக வழங்கப்
படவேண்டும் போன்றவை உள்ளிட்ட 1 5 அம்சக் கோரிக்கை களை வலியுறுத்தி மத்திய
அரசு ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடவேண்டும் என்பது
குறித்த பிரச்சார இயக்கத்தை துவக்கி வைத்து நீண்ட உரை ஆற்றினார்.
உணவு
இடைவேளைக்குப் பிறகு மதியம் 02.00 மணியள வில் மாநில மாநாடு துவங்கியது .
தோழர். AGP அவர்கள் தலைமை வகித்தார். மாநாட்டில் நமது NFPE
சம்மேளனத்தின் முன்னாள் மாபொதுச் செயலர் தோழர். K.R., அஞ்சல் மூன்றின்
முன்னாள் பொதுச் செயலர் தோழர் K.V.S., AUDIT & ACCOUNTS சங்கத்தின்
முன்னாள் பொதுச் செயலர் தோழர். A.V.V., NFPE சம்மேளனத்தின் உதவிப் பொதுச்
செயலர் தோழர். ரகுபதி, உள்ளிட்ட பலதுறை சார்ந்த சங்கங்களின் தலைவர்கள்
வாழ்த்துரை வழங்கினார் கள். அதன் பின் மாநாட்டு அறிக்கை தோழர்
துரைபாண்டியன் அவர்களால் வழங்கப் பட்டது. தொடர்ந்து வரவு செலவு கணக்குகள்
தோழர். சுந்தரம் அவர்களால் சமர்ப்பிக்கப் பட்டது.
மாநாட்டில்
60 ஆண்டுகளுக்கு மேலாக தொழிற் சங்க இயக்கத்தில் தன்னை அர்ப்பணித்துக்
கொண்டு தனது 82 ஆவது வயதிலும் முழு நாள் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி
நடத்திக் கொடுத்த , தமிழ் மாநில மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின்
தலைவர் தோழர் A.G.P. அவர்களும், கடந்த 10 ஆண்டுகளாக அனைத்து துறை
ஊழியர்களிடமும் இனிமையாகப் பழகி, இயக்கம் வளர்ச்சி பெற அனைத்து போராட்டங்
களிலும் ஊழியர்களை ஒருங்கிணைப்பதில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு
செயலாற்றிய மாநிலப் பொருளாளர் தோழர் சுந்தரம் அவர்களும் நமது மாபொதுச்
செயலரால் பாராட்டி கௌரவிக்கப் பட்டார்கள். தொடர்ந்து தோழர். AGP அவர்கள்
வழங்கிய ஏற்புரை எழுச்சி மிக்கதாக அமைந்தது .
இதன்
பின்னர் பல துறை சார்ந்த சங்கங்களில் இருந்து சார்பாளர்கள் கலந்துகொண்டு
அறிக்கை மீதான விவாதத்தில் தங்களது கருத்துக் களை வழங்கினார்கள்.
இறுதியாக மாநாட்டு நிர்வாகிகள் தேர்தல் ஒருமனதாக நடைபெற்றது. கீழ்க்
கண்ட நிர்வாகிகள் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப் பட்டார்கள்.
மாநிலத் தலைவர் : தோழர். J. இராமமூர்த்தி , NFPE P3 அஞ்சல் துறை.
மாநில உதவித் தலைவர் :தோழர். B. கம்பீரம் , CGHS
தோழர். S. சாம்ராஜ், சாஸ்த்ரி பவன் COC
தோழர். K. சங்கரன் , NFPE R3 அஞ்சல் துறை
பொதுச் செயலர் : தோழர். M. துரைபாண்டியன் , AG'S OFFICE
செயலாளர்கள் : தோழர். V. ராஜேந்திரன், NFPE P4, அஞ்சல்துறை.
தோழர். M. சந்தானம் NFPE R4, அஞ்சல் துறை
தோழர். சுரேந்திரன், A.I.R. & DD
மாநிலப் பொருளாளர் : தோழர். S. சுந்தரமூர்த்தி , INCOME TAX
அமைப்புச் செயலர்கள் : தோழர். P. நாகராஜன், NFPE ADMIN
அஞ்சல்துறை
தோழர்.K.K. விஜயன் , INCOME TAX
தோழர்.S. அப்பன்ராஜ், NFPE SBCO
அஞ்சல்துறை
தோழர். R.R. ஷ்யாம்நாத் , INCOME TAX
தோழர். A. பாலசுப்ரமணியன், CIVIL ACCOUNTS
தோழர். R. தனராஜ், GDS, அஞ்சல் துறை
தோழர். A. சதாசிவம், ATOMIC ENERGY
தோழர். K. மருதநாயகம், NFPE P3,
அஞ்சல்துறை
தோழர். A. பாலசுந்தரம் , CG WATER BOARD
தணிக்கையாளர் : தோழர். சந்தோஷ் குமார், NFPE
A/C,அஞ்சல்துறை.
மாநாட்டில் தமிழகத்தின் பல்வேறு
பகுதிகளில் இருந்தும் பல்வேறு துறைகளில் இருந்தும் சுமார் 600 க்கும்
மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டார்கள் . காலை முதல் மாலை வரை
சார்பாளர்கள் கலையாமல் முழுமையாக பங்குகொண்டது சிறப்பான நிகழ்வு
ஆகும். மாலை 05.30 மணியளவில் தோழர். M.S. வெங்கடேசன் , INCOME TAX
அவர்கள் நன்றியுரையாற்ற , மாநாடு இனிதே முடிவுற்றது.
No comments:
Post a Comment