""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
அன்புத் தோழர்களுக்கு வணக்கம் !
கடந்த 27 மற்றும் 28.6.17 இரண்டு நாட்கள் தமிழக அஞ்சல் RMS இணைப்புக்குழு சார்பில் தோழர். கிருஷ்ணன் அவர்கள் தலைமையில் CPMG அலுவலகம் முன்பாக உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது தெரிந்ததே . நிர்வாகம்பிரச்னைகளை தீர்க்க முன்வராததால்
NFPE COC சார்பில் 28.6.17 மாலையே தேங்கிக் கிடக்கும் இதர பகுதி கோரிக்கைகளையும் சேர்த்து , அனைத்து சங்கங்களையும் உள்ளடக்கி,
எதிர்வரும் 13.7.17 அன்று ஒருநாள் தமிழகம் தழுவிய வேலை நிறுத்தம் நடத்துவதாக CPMG அவர்களுக்கு கடிதம் அளிக்கப்பட்டது.
இதனை ஒட்டி நேற்று (29.6.17) இரவு P3, P4, R3, R4, SBCO, Admin, Accounts, GDS, Casual Labour ஊழியர் சங்கங்களின் பிரதானமான இரண்டு கோரிக்கைகள் வீதம் சேர்க்கப்பட்டு எதிர் வரும் 13.7.2017 அன்று ஒருநாள் வேலை நிறுத்தத்தில் செல்வதற்கான சட்ட பூர்வமான நோட்டீஸ் CPMG, DG Posts மற்றும்
Regional Labour Commissioner க்கு துரித அஞ்சல் மூலம் அனுப்பப் பட்டுள்ளது.
இதன்மூலம் தொழிலாளர் நல ஆணையர் முன்னிலையில் பேச்சு வார்த்தை நடத்தி பிரச்னைகளை தீர்க்க வேண்டிய கட்டாய சூழல் மாநில அஞ்சல் நிர்வாகத்திற்கு ஏற்பட்டுள்ளது.
வேலை நிறுத்த நோட்டீஸ் மற்றும்/கோரிக்கைப் பட்டியல் உங்களின்
பார்வைக்கு தனியே அளிக்கப்படும்.
அஞ்சல் மூன்று சங்கத்தைப் பொறுத்தவரையில், இந்த வேலை நிறுத்த கோரிக்கைகளில்,
சென்னை பெருநகரத்தில் கேடர் சீரமைப்பு தொடர்பான நம் மாநிலச் சங்கம் ஏற்கனவே அளித்த 15 அம்சங்கள் அடங்கிய பிரச்னைகள் தீர்க்கப்பட வேண்டும் என்பது முக்கியமான கோரிக்கையாகும்.
இதிலும் முக்கிய அம்சம், சென்னை பெருநகர Divisions/unit களுக்கு 5:1 விகித அடிப்படையில் LSG பதவிகள் அதிகப்படுத்திக் கொடுக்கவேண்டும் என்பதும், அதையும் மீறி வெளியே செல்ல வேண்டிய தோழர்கள் இருந்தால் அவர்கள் Decline செய்யும் பட்சத்தில் அது ஏற்கப்பட வேண்டும் என்பதும் ஆகும்.
தற்போது 4.7.17 Cut off தேதி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதால் Declination உடனே கொடுக்கப் போவதாக சில கோட்டச் செயலர்கள் நம்மிடம் இன்று (29.6.17) தெரிவித்தார்கள்.
இதற்கு மாநிலச்சங்கத்தின் ஆலோசனை என்னவெனில்,
பிரச்னை ஏற்கனவே தொழிலாளர் நல ஆணையர்முன் சென்றுள்ளதாலும்,
பலர் நீதிமன்றத்தை நாடியுள்ளதாலும் ,
LSG பதவிகள் சென்னை பெருநகரப் பகுதியில் உள்ள அலுவலகங்களில் அதிகப் படுத்தப்படவும் பணி மூத்த தோழர்களுக்கு இங்கேயே கிடைக்கவும் வாய்ப்பு ஏற்பட சாதகமான நிலை ஏற்பட்டுள்ளது.
இது முடிவுக்கு வருவதற்கு குறைந்த பட்சம் 10 நாட்கள் ஆகலாம். இதற்கிடையே Decline செய்து அது ஏற்கப்பட்டுவிட்டால் , புதிதாக LSG பதவிகள் சென்னை பகுதிக்கு அளிக்கப்பட்டாலும் Decline செய்த ஊழியர்களுக்கு இது மறுக்கப்படும்.
எனவே பள்ளி, கல்லூரிகள் துவங்கி விட்ட சூழலில் புதிய பகுதியில் வீடு பார்ப்பதில் உள்ள பிரச்னைகள் இருப்பதை சுட்டிக்காட்டி 15 நாட்கள் கால அவகாசம் கேட்டு கடிதம் அளிக்கலாம். அதற்குள்இந்தப் பிரச்னையில் முன்னேற்றம் தெரியும்.
அதற்கேற்ப இறுதி முடிவுகள் எடுத்துக் கொள்ளலாம்.
இதற்கான உதவிகளை ஊழியர்களுக்கு கோட்ட/கிளைச் செயலர்கள் அளிக்குமாறு வேண்டுகிறோம்.
எனவே அனைவரும் NFPE COCஅறிவித்துள்ள மாநில அளவிலான ஒரு நாள் வேலை
நிறுத்தத்திற்கான தயாரிப்பு வேலைகளில்
முழு முனைப்புடன் ஈடுபட வேண்டுகிறோம்.
இதற்கான சுற்றறிக்கை ஓரிரு நாட்களில் COC மூலம் வெளியிடப்படும்.
போராட்ட வாழ்த்துக்களுடன்
NFPE அஞ்சல் மூன்று சங்கம்,
தமிழ் மாநிலம்.
No comments:
Post a Comment